2025 மே 17, சனிக்கிழமை

கைவரிசை காட்டிய நால்வர் கைது

Freelancer   / 2022 நவம்பர் 29 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா
 
பசறைப் பகுதியில் வீட்டொன்றின் பின்புறமாக நுழைந்து, களவெடுத்த நால்வர் களவாடிய பொருட்களுடன், பசறைப் பொலிஸாரினால் ஞாயிற்றுக்கிழமை 927) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
பசறை மவுசாகலை எனுமிடத்தில் வீடொன்றின் பின்புறமாக நுழைந்து எல். ஈ. டீ தொலைக்காட்சி, மின் அரைப்பான், முற்கால சில்லறை நாணயங்கள், பித்தளை கம்பிகள், பெருமளவிலான மின் இயந்திரங்கள் உள்ளிட்ட சுமார் ஆறு இலட்சம் பெறுமதியான பொருட்களே திருடப்பட்டுள்ளன.
 
 பசறைப் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து களவாடப்பட்ட பொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .