2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கைவிடப்பட்ட தேயிலைக் காணிகளில் மீண்டும் கோப்பி செய்கை

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 06 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

நுவரெலியா மாவட்டத்தில் கலப்பின காபி பயிர்ச்செய்கையை ஊக்குவித்து பாதிக்கப்பட்ட மலையக விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தினால் கோப்பி பயிர்ச்செய்கையை ஊக்குவித்தல் மற்றும் செயற்திட்டத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து அறிவிக்கும்  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

இலங்கை ஆய்வாளர் ஒருவரால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கைக்கு ஏற்ற கோப்பி இனத்தை  நுவரெலியா மாவட்டத்தின், 491 பிரிவுகளில்  352 பிரிவுகளில் இந்த புதிய இன கோப்பியை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என்றார்.

இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் ஐந்து இலட்சம் செடிகள் சோதனை நோக்கத்திற்காக நடப்பட்டுள்ளதுடன் மேலும் இரண்டு இலட்சம் செடிகள் நாற்றப்படவுள்ளன என்றார்.

அடுத்த 3 வருடங்களில் நுவரெலியா மாவட்டத்தில் 400,000 மரக்கன்றுகளை நடுவதே எமது இலக்காகும். இது வெற்றிப்பெற்றால் வருடாந்தம் 150 மில்லியன் டொலரை வருமானமாகப் பெறலாம் என்றார்.

இந்த காபி பயிர்ச்செய்கைக்காக பல்வேறு திணைக்களங்களின் கீழ் கைவிடப்பட்ட தேயிலை பயிர்ச்செய்கை மற்றும் பயிரிடப்படாத நிலங்களை பயன்படுத்த எதிர்பார்க்கிறோம் என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .