Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதிஸ்
முதியோர்களுக்கான சமுர்த்தி கொடுப்பனவு, பெருந்தோட்ட மாணவர்களுக்கானப் புலமைப்பரிசில் கொடுப்பனவு போன்றவற்றில், குளறுபடிகள் இடம்பெறுவதாகவும் இந்தக் கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்படுவதில்லை என்றும், நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
நோர்வூட் பிரதேச சபையின் அமர்வு, அதன் தவிசாளர் கணபதி ரவி குழந்தைவேலின் தலைமையில், இன்று (24) காலை நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய சபையின் உறுப்பினர் மு.இராமச்சந்திரன், முதியோர்களுக்காக மாதாந்தம் வழங்கப்படுகின்ற 2,000 ரூபாய் சமுர்த்தி கொடுப்பனவில், குளறுபடிகள் இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
சில தபால் நிலையங்கள், முதியோருக்கு வழங்கப்பட வேண்டிய 2,000 ரூபாய் தொகையை முழுமையாக வழங்காது, 100 ரூபாயைக் குறைத்துக்கொண்டே வழங்குவதாகவும் அவர் சபையின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
இதேவேளை, புலமைப்பரீசிலை பெற்றுக்கொள்கின்ற பெருந்தோட்ட மாணவர்களுக்கும், அந்தக் கொடுப்பனவு முறையாக வழங்கப்படுவது இல்லை என்றும், அவர் சபையின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
மேற்படி விடயங்களை, அம்பகமுவ பிரதேச செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது சபைத் தவிசாளரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த சபைத் தவிசாளர், இவ்விடயங்களை, அம்பமுகவ பிரதேச செயலகத்தின் மாதாந்த அமர்வு நடைபெறுகின்றபோது, சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.
14 minute ago
45 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
45 minute ago
2 hours ago
3 hours ago