2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

கொடுப்பனவை பெறுவதில் முதியவர்கள் சிரமம்

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 29 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம் 

அக்கரப்பத்தனை பகுதியில் முதியோர் கொடுப்பனவு பெறும்,பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக, இந்த கொடுப்பனவை பெற வரும் முதியவர்கள் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்காக, சுமார் 400 க்கும் மேற்பட்ட முதியவர்கள் ஒவ்வொரு மாதமும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அக்கபரபத்தனை தபாலகலகத்திற்கு வருகை தருகின்றனர்.

 எனினும் குறித்த கொடுப்பனவை உரிய நேரத்தில் பெற முடியாமல் பலமணிநேரம் வீதியில் காத்திருக்க வேண்டிய நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தக் கொடுப்பனவை பெறுவதற்கு ஓட்டோவுக்கு செலவிட்டு, சிரமங்களுக்கு  உரிய முறையில் உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தபாலக ஊழியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ஒரே நாளில் பலரும் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள வருவதனால், இவ்வாறு காத்திருக்க வேண்டி ஏற்படுவதாகவும் ஊழியர்கள் குறைவாக உள்ளதனால் குறித்த கொடுப்பனவு வழங்க தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X