2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கொட்டகலை பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2023 ஜனவரி 18 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

நுவரெலியா கல்வி வலயத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் கொட்டகலை தமிழ் தேசிய வித்தியாலயத்துக்கு தோட்டப்புற மாணவர்களையும் இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து இன்று (18) காலை பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பாடசாலையில் 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில், ட்ரேட்டன் தோட்டத்தைச் சேர்ந்த மாணவர்களை அப்பாடசாலையில் இணைத்துக்கொள்ள அதிபர் அனுமதி மறுப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது தோட்டத்தில் பாடசாலையொன்று காணப்படுகின்ற நிலையில், தமது தோட்டத்தில் உள்ள தரம் ஆறுக்கு மேல் கல்வி பயிலும் மாணவர்களையும் கொட்டகலை தமிழ் தேசிய பாடசாலையில்உள்வாங்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது நுவரெலியா கல்வி வலய அதிகாரிகளுக்கும் பாடசாலையின் அதிபர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன், உயர்தர பரீட்சைகளின் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வை முன்வைப்பதாக பாடசாலை தரப்பில் தெரிவித்ததையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .