2026 ஜனவரி 21, புதன்கிழமை

கொட்டகலையில் 10 குடும்பங்கள் தனிமை

Editorial   / 2021 ஜூன் 01 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

கொட்டகலை பொரஸ்ட்கிறிக் தோட்டத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என   கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அறிவித்துள்ளது.

அத்தோட்டத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் நேற்று முன்தினம்  (30) திடிரென உயிரிழந்தார். அவ்வாறு உயிரிழந்தவர் தொடர்பில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவில் அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்தே மரணித்தவர் வசித்த தொடர் குடியிருப்பு தொகுதியிலுள்ள மேற்குறித்தவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X