2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கொட்டகலையில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

R.Maheshwary   / 2022 நவம்பர் 13 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

கொட்டகலை பிரதேசத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாமொன்று இன்று (13) கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் மண்டபத்தில் நடத்தப்பட்டது.

கொட்டகலை நகர வர்த்தகச் சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் புஸ்பா மற்றும் வர்த்தக சங்கத்தின் ஏனைய உறுப்பினர்களால் இந்த இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொட்டகலை பிரதேச வைத்திய அதிகாரி வைத்தியர்  சாவித்திரி சர்மா உள்ளிட்ட வைத்தியசாலையின் ஏனைய வைத்தியர்கள் பணியாளர்சபையினரால் இந்த வைத்தியமுகாம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கொட்டகலை மற்றும் அதனை அண்மித்த தோட்டங்கள் கிராமபுறங்களைச் சேர்ந்த 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரத்தக்கொதிப்பு பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை உள்ளிட்ட பல தொற்றா நோய்கள் ​தொடர் பான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், இலவசமாக மருத்துவ அறிக்கையும் வழங்கப்பட்டது.

 இவ்வாறு வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கையை கொட்டகலை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் காண்பித்து, அவர்களுக்கு தேவையான மருந்துகளை விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டன்- கொட்டகலை பிரதேசங்களில் உள்ள மக்கள் தொற்றா நோய் தொடர்பான மருத்துவ அறிக்கைகளைப் ​பெற்றுக்கொள்ள அதிக நிதியை செலவிடுவதன் காரணமாக அந்த நோயாளர்களுக்கான மருத்துவ அறிக்கை இவ்வாறு இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என கொட்டகலை நகர வர்த்தகச் சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் புஸ்பா தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .