2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

கொட்டகலையில் நாளை கடையடைப்பு போராட்டம்

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 05 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நீலமேகம் பிரசாந்த்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவை எதிர்த்து, கொட்டகலை நகரில் கடைகள் முழுவதையும் அடைத்து அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டத்தை முன்னெடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கொட்டகலை வர்த்தக சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை வர்த்தக சங்கத்தித்தினுடனான கலந்துரையாடல் இன்று (5)  இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை  (6)  கொட்டகலை நகர கடைகளை அடைத்து அரசாங்கத்துக்கு எதிராக அழுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய,  நாளை  காலை முதல் கொட்டகலை நகர கடைகள் யாவும் மூடப்பட்டிருக்குமென வர்த்தக சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X