2026 ஜனவரி 21, புதன்கிழமை

கொட்டகலையில் விபத்து; இருவர் காயம்

Editorial   / 2021 மே 26 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.பாலேந்திரன்

கொட்டகலை நகரில்  நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர்  காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
நண்பகல்  12.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
 
நுவரெலியாவில் இருந்து வந்த கெப் ரக வாகனமும் கொட்டகலை எதன்வைட் தோட்டத்திலிருந்து வந்த முச்சக்கர வண்டியும் கொட்டகலை நகரில் ஒன்றுக்கொன்று மோதிய போதே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவ்விபத்து குறித்த  மேலதிக  விசாரணைகளை திம்புல்ல பத்தனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X