2025 மே 05, திங்கட்கிழமை

கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு தலவாக்கலையில் விசேட திட்டம்

Gavitha   / 2020 நவம்பர் 11 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷன் 

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தலவாக்கலை நகரத்துக்கு வரும் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் நோக்கில், தலவாக்கலை நகரசபைத் தலைவர் லெ.பாரதிதாசன் தலைமையில், விசேட கொரோனா செயலணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார பிரிவு, பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து, தெரிவு செய்யப்பட்ட 10 இளைஞர்களுக்கு, கொரோனா தடுப்பது, இணங்காண்பது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான அங்கிகள் வழங்கப்பட்டுள்துடன்,  நகரத்துக்கு வரும் மக்களில் எழுமாறாக தெரிவு செய்யப்பட்ட மக்களின் உடல் உஷ்ணத்தை அளத்தல், கைகளை தொற்று நீக்கம் செய்தல், முகக்கவசம் அணிந்துள்ளனரா என்பது தொடர்பான அவதானித்தல், தொடர்பான கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்தச் செயற்றட்டம் நேற்று (11) ஆரம்பிக்கப்பட்டதுடன், தீபாவளி முடியும் வரை செயற்படுத்தப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X