2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கொழுந்துடன் வந்த ட்ரக்டர் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; ஐவர் காயம்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 19 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி

பலாங்கொடை- பம்பஹின்ன பொலிஸ்  பிரிவிலுள்ள நொன்பெரில் தோட்டத்தில்  ட்ரக்டர் (உழவு இயந்திரம்) பாதையை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளதாக்கில் வீழ்ந்ததில், சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று(18)  இரவு 8 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்தவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில்  நொன்பெரில் தோட்டத்தைச் சேர்ந்த 40 வயதான பி. சிவக்குமார் (இரண்டு பிள்ளைகளின் தந்தை) என்பவரே உயிழந்துள்ளார்.

 தேயிலைக் கொழுந்து ஏற்றிவரும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X