R.Maheshwary / 2021 டிசெம்பர் 29 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
கொஸ்லாந்தை – கொலங்கொஸ்தென்ன மற்றும்தும்மலஆர வனப்பகுதியை அண்மித்த பகுதியில் காணப்பட்ட மூன்றரை ஏக்கர் கஞ்சா செய்கை காணிகள் இரண்டு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஒரு காணியில் இரண்டரை அடி உயரமான 3200 கஞ்சா செடிகள் காணப்பட்டதுடன் மற்றைய காணியில் 2அடி உயரமான 1800 கஞ்சா செடிகள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், அவற்றின் ஓரிரண்டு மாதிரிகளை நீதிமன்றத்தில் முன்வைப்பதற்காக வைத்துக்கொண்டு ஏனையவற்றை தீயிட்டு கொழுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், கொஸ்லாந்தையைச் சேர்ந்த 39 வயதானவரை என்றும் அவரை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கொஸ்லாந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .