2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

‘க்ளைபோசெட்டை அனுமதியேன்’

Editorial   / 2017 ஜூலை 13 , மு.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தடைசெய்யப்பட்ட க்ளைபோசெட் கிருமிநாசினியை பெருந்தோட்டங்களில் பயன்படுத்துவதை, நான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. இந்தக் களைநாசினி பயன்பாட்டுக்கு முற்றுமுழுதாக எதிர்ப்பைத் தெரிவிக்கின்றேன்” என்று, மலையக புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். 

“தடைசெய்யப்பட்ட களைநாசினியான க்ளைபோசெட் களைநாசினியை, மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர், இறக்குமதி செய்து, அதனை பெருந்தோட்டங்களுக்கு பயன்படுத்தவுள்ளார். இதனை நாம் கடுமையாக எதிர்கின்றோம்” என்று, அமைச்சரொருவர் கூறியிருந்தார். 

இந்நிலையில், மலையகத்தை பிரநிதித்துவப்படுத்தும் அமைச்சர் என்ற முறையில், அமைச்சர் பழனி திகாம்பரத்தை தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இந்தக் களைநாசினியின் பயன்பாட்டினால், ஏற்படப்போகும் பாதிப்புகள் தொடர்பில், அவரிடம் ​கேட்டறிவதற்கு முயன்றபோதிலும், அம்முயற்சி கைகூடாமலே, அலைபேசி அழைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .