Kogilavani / 2016 மே 26 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டத்தைத் தடுப்பதற்காக, தோட்ட எல்லைகளில் வலை வேலிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது, தோட்ட அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்ஈ இணைத் தலைவர்களான மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச ஆகியோரின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது.
இதன்போது, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், பெருந்தோட்ட பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் பற்றியும் சிறுத்தைகளின் தாக்குதலுக்கு உள்ளாவோருக்கு வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக நட்டஈட்டைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளிக்கும்போதே, தோட்ட அதிகாரிகள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். இதேவேளை, சிறுத்தைகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் தொழிலாளர்கள், தோட்ட அதிகாரியினதும் கிராம அதிகாரியினதும் உறுதிப்படுத்தலுடன் ஆதாரங்களை சமர்ப்பித்து, வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்திடமிருந்து நட்டஈடடைப் பெற்றுகொள்ள முடியும் என்றும் தோட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேவேளை, தோட்ட குடியிருப்புகளுக்கு மின்சார வசதிகளை பெற்றுக்கொள்ள தோட்ட அதிகாரியின் உறுதிப்படுத்தல் அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டை, மின்சார சபை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜின் முன்மொழிவையும் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago