Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவிந்திர விராஜ் அபயசிறி
நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மாத்தளை சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்ட இரு சிறுவர்களின் தாய், கடந்த திங்கட்கிழமை (30) வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியுள்ள நிலையில், தனது பிள்ளைகளை பெற்றுத்தருமாறு கோரியுள்ளார் என மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். ஆதரவற்ற நிலையில் இருந்த ஆறு சிறுவர்கள், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மாத்தளை பொலிஸாரால் கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
இச்சிறுவர்கள் இருவரின் தாயே இவ்வாறு தனது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி முறைப்பாடொன்றினை வழங்கியுள்ளார்.
குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'நான் வெளிநாடு சென்றது எனது பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்கவே. எனது மூன்று குழந்தைகளில் இருவரை சிறுவர் இல்லத்தில் சேர்த்துள்ளனர். நான் திரும்பி வரும்போது எனது பெண் பிள்ளை மட்டுமே வீட்டில் இருந்தாள்.எனது அம்மாவிடம் என்னுடைய குழந்தைகள் மூவர், எனது சகோதரியின் குழந்தைகள் நால்வர் மற்றும் எனது சகோதரனுடைய குழந்தைகள் இருவர் என 09 குழந்தைகளையும் ஒப்படைத்து விட்டு வெளிநாடு சென்றோம். ஆனால், அம்மா வீட்டில் இல்லாத வேளை 06 குழந்தைகளையும் பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.
இத்தனை காலமாக அரசாங்கத்திடமிருந்து எவ்வித உதவியும் பெறாமல் பலகை வீட்டில், தண்ணீர் வசதி, மின்சார வசதி என எதுவுமின்றி இருந்தமையாலே, எமது குழந்தைகளின் எதிர்காலம் கருதி நாம் வெளிநாடு சென்றோம். இங்கு நடந்த இச்சம்பவத்தினால் நான் திடீரென வந்தமையால் சம்பளம் இல்லாமல்தான் வந்தேன். நான் பண உதவியெதுவும் கேட்கவில்லை. ஆனால், எங்களது பிள்ளைகளை மாத்திரம் மீட்டுத்தாருங்கள்.
இதனால் எனது சகோதரர்களும் நாடு திரும்பவுள்ளனர். எனவே, எங்களது குழந்தைகளை மீண்டும் எம்மிடம் ஒப்படைக்குமாறு உரிய அதிகாரிகளிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்' என முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago