Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.ஆ.கோகிலவாணி
'பொதுத் தேர்தலில் வெற்றிவாய்ப்புகள் இருந்தபோதிலும் சூழ்ச்சிகளால் அது கைநழுவி போய்விட்டது. தேர்தலில் ஒரு பெண்ணாக களமிறங்கிய நான், பல்வேறு சவால்கள் மற்றும் போராட்டங்களை எதிர்கொண்டே இந்த வாக்குகளை பெற்றுகொண்டேன். என்னை ஒரு பெண்ணாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினராக மதித்து வாக்குகளை அளித்த அனைத்து மக்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன்' என நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட அனுஷியா சிவராஜா தெரிவித்தார்.
'பொதுத் தேர்தலில் நான் பின்னடைவை எதிர்கொண்டிருந்தாலும் மக்களுக்கான எனது சேவை தொடரும்' என்றும் அவர் கூறினார்.
அரசியலில் அடுத்தக்கட்ட நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இதனை கூறினார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'தேர்தல் காலத்தில் மக்கள் தெளிவாகவே இருந்தனர். ஆனால், மக்களை குழப்புவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஐ.ம.சு.கூ இன் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட நான் ஒரு பெண்ணாக இருந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டேன். பிரசார நடவடிக்கைகளின்போது, சுவரொட்டிகளில் எனது புகைப்படங்களின் மீது சதாசிவம் தனது புகைப்படத்தை ஒட்டி மக்களின் மனதை திசைதிருப்பினார். தேர்தல் விதிமுறைகளை மீறிய இச்செயல் குறித்து நான், பொலிஸ் நிலையத்திலும் தேர்தல் ஆணையாளரிடமும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான கண்காணிப்பு அமைப்பிலும் முறைப்பாடு செய்துள்ளேன்.
இதேபோன்று பிரஜைகள் முன்னணி, மலையகத்தில் மூன்று பெண்களை சுயேச்சையாக களமிரக்கியது. இதனால், மக்களின் மனதில் குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டதுடன் வாக்குகள் சிதரடிக்கப்பட்டன. இதுவே நான் தேர்தலில் பின்னடைவதற்கு காரணமாக அமைந்தது' என்றும் அவர் கூறினார்.
'நான் தேர்தலில் பின்னடைந்திருந்தாலும் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவதற்கான மனதைரியமும் ஊக்கமும் எனக்குள்ளது' என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago