2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

சகோதரியை தாக்கியவர் மைத்துனரால் கொலை

Janu   / 2024 ஜனவரி 22 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிபோதையில் வந்து மனைவியைத் தாக்கிய மைத்துனரை,  கோடாரியால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை (21) மலை தெஹிஓவிட்ட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

திகல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்னார் என தெஹிஓவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தன்று உயிரிழந்தவர் குடிபோதையில் வந்து தனது சகோதரியைத் தாக்கியதாகவும், அதனை பார்த்த அவரது கணவர் கோடரியால் தாக்கி தனது மைத்துனரைக் கொலை செய்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடத்திய 43 வயதுடைய நபரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X