2025 மே 16, வெள்ளிக்கிழமை

சட்ட வைத்திய நிபுணர் இன்மையால் பொது மக்கள் சிரமம்

R.Maheshwary   / 2023 ஜனவரி 04 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

மொனராகலை மாவட்டத்தில் சட்ட வைத்திய நிபுணர் இன்மையால் சடலங்களை பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய விசேட சட்ட வைத்திய அதிகாரி வெளிநாடு சென்றுள்ள  குறித்த வெற்றிடத்திற்கு 6 மாதங்கள் கடந்தும் இதுவரை  விசேட வைத்தியர் ஒருவர்  நியமிக்கப்படவில்லை.

தற்போது ஊவா மாகாணத்தில் உள்ள பதுளை பொது வைத்தியசாலையில் நிபுணத்துவ சட்ட வைத்தியர் மாத்திரமே கடமையாற்றுகின்றார்.

இந்நிலையில்  மொனராகலை வைத்தியசாலைகளில் நிகழும் மரணங்கள் நேரங்களில் விசேட வைத்தியரால் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களில் சடலங்களை பதுளை, பலாங்கொடை மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.

இறந்தவரின் உறவினர்கள் இறந்த உடலை எடுத்துச் செல்ல பெரும் தொகையை செலவழிக்க வேண்டியுள்ளதுடன் சடலத்தைப் ​ பெற உறவினர்கள் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே, மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சட்ட வைத்தியர் நிபுணர்  ஒருவரை உடனடியாக நியமிக்குமாறு மாவட்ட மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .