2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத கூடாரங்கள் நிர்மாணித்தமைக்கு எதிர்ப்பு

Freelancer   / 2022 நவம்பர் 10 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர், சட்டவிரோதமான முறையில் கடைகளை நிர்மாணிப்பதற்காக சட்டவிரோதமான முறையில் கூடாரங்களை அமைத்தமைக்கு அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

அந்த உறுப்பினரால், திங்கட்கிழமை (07) இவ்வாறு சட்டவிரோதமான முறையில் கடைகளை நிர்மாணிப்பதற்காக, தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டன. அவற்றுக்கு செவ்வாய்க்கிழமை (08) கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஹட்டன்- பொகவந்தலாவை பிரதான வீதியில் டின்சின் நகருக்கு அண்மையிலேயே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் கூடாரங்கள் நிர்மாணிக்கப்பட்டன என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.

பெருந்தோட்டத்துக்குச் சொந்தமான காணிகளை வெளியார் ஆக்கிரமிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சட்டவி​ரோதமான கூடாரங்களை அப்புறப்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின், தாங்களும் அவ்விடத்தில் இடங்களைப் பிடித்து, கூடாரங்களை அமைப்போமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .