Freelancer / 2023 மார்ச் 03 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
உலக வங்கியின் ஊடாக மலையக பெருந்தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள சிறார்களுக்கு போஷாக்கான சத்துணவு வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அதைப் படம் பிடித்து விளம்பரம் தேடிக்கொள்வதும் மலையக சிறார்களை போஷாக்கற்றவர்கள் போல சித்தரிப்பது எம் சமூகத்தை நாமே இழிவுபடுத்துவது போல காணப்படுவதாக மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விளக்கமளிக்கையில், இத்திட்டம் உலக வங்கியின் நிதியொதுக்கீட்டின் கீழ் மலையகத்தில் காணப்படும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களைச் சேர்ந்த 23,000 சிறார்களை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டம் வெறுமனே ஆறுமாதங்களுக்கு மாத்திரமே வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் திட்டம் வரவேற்கத்தக்கது எனினும், எம் மலையக சிறார்கள் இத்தனை காலமும் போஷாக்கற்றவர்கள் போல சித்திரிப்பதும் உணவுகளை வழங்கும் போது அவர்களின் புகைப்படங்களை ஊடகங்கள் பதிவேற்றுவதும் சற்று நம் சமூகத்தை இழிவுபடுத்துவது போல அமைகின்றது என்றார்.
எனவே, இவ்வாறான செயற்பாட்டை அமைச்சர் ஜீவன் தொண்டமான் மாற்றி கொள்ள வேண்டும். அதேபோல தன் ஆதரவாளர்களுக்கும் தன் கட்சியை சார்ந்தவர்களுக்கும் கூற வேண்டும் என்றும் சஞ்சய் கேட்டுக்கொண்டுள்ளார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago