2025 மே 05, திங்கட்கிழமை

‘சப்ரகமுவ மாகாணத்தில் கல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம்’

Gavitha   / 2020 நவம்பர் 10 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதோடு, சப்ரகமுவ மாகாணத்தில் கல்வி நடவடிக்கைகளை முறையாகச் செயல்படுத்துமாறு சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ கோரிக்கை விடுத்துள்ளார்.

சப்கமுவ மாகாண கல்வி அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று, நேற்று (09) சப்ரகமுவ மாகாண சபை கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யூடியூப், வாட்ஸ்ஆப், இறுவட்டுகள் போன்றவை மூலம், சப்ரகமுவ மாகாண மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்றும் அத்தோடு சுகாதார ஆலோசனைக்கமைய, பாடசாலை மாணவர்களை ஐந்து பேர் கொண்ட குழுக்களாக இணைத்து, அவர்களின் இருப்பிடங்களின் மட்டத்திலாவது ஆசிரியர்களின் கண்காணிப்பின் கீழ், கல்வி நிலையை முறையாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இணைய வசதி, தகவல் தொலைதொடர்பு வசதிகள் உள்ளிட்ட நவீன  வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X