2025 மே 05, திங்கட்கிழமை

சப்ரகமுவ மாகாணத்தில் பஸ்களின் அளவு குறைகிறது

Gavitha   / 2020 நவம்பர் 11 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

சப்ரகமுவ மாகாணத்தில், வழமையாக  2,000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த என்றும் எனினும் தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, 1,700 பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று சப்ரகமுவ மாகாண போக்குவரத்து அதிகார சபைத் தலைவர் தமித் பிரியந்த படவல தெரிவித்தார்.

இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில், போக்குவரத்துச் சேவையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பஸ் கட்டண அதிகரிப்போ வேறு காரணங்களோ, பஸ்களின் தட்டுப்பாட்டுக்குக் காரணம் இலங்கை என்றும் கொரோனா அச்சம் காரணமாக, பலர் வீடுகளிலேயே இருப்பதால், பஸ் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X