R.Maheshwary / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
சப்ரகமுவ மாகாண சபையின் பிரதான அமைச்சு, மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் மாகாண கல்வி அமைச்சு என்பவற்றுக்கு புதிதாக மூன்று செயலாளர்களை நியமிப்பதற்கு சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்கமைய சப்ரகமுவ மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவினால் சப்ரகமுவ மாகாண பிரதான அமைச்சின் செயலாளராக பிரபாத் உதாகர, சப்ரகமுவ மாகாண ஆளுநர் அலுவலகத்தின் செயலாளராக எச்.டி.சிசிர, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக சுஜானி ரசாங்கிகா விஜேதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமன கடிதங்கள் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவினால் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து நேற்று ( 21) வழங்கி வைக்கப்பட்டது.



5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026