Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 பெப்ரவரி 21 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
கினிகத்தேனை- பொல்பிட்டிய சமனல நீர் மின் உற்பத்தி நிலைய உபகரணங்களில் மேற்கொள்ளப்படும் திருத்தவேளைகள் காரணமாக சனிக்கிழமையில் இருந்து (18) குறித்த நீர் மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுள்ளதாக குறித்த மின் உற்பத்தி நிலையத்தின் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த நீர்மின் உற்பத்தி நிலையம் ஊடாக 75 மெகாவோட் மின் உற்பத்தி செய்யப்படுவதுடன் லக்ஸபான நீர்மின் உற்பத்திக்காக பெற்றுக்கொள்ளப்படும் நீர், லக்ஸபான நீர்த்தேக்கத்திலிருந்து சுரங்க வழியாக சமனல நீர்மின் உற்பத்தி நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றது.
சமனல நீர் மின் உற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், லக்ஸபான நீர் மின் உற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தியின் பின்னர் களனி ஆற்றுக்கு நீரைத் திறந்து விடுவதற்கு லக்ஸபான நீர் மின் நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago