2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சமிக்ஞைக்காக காத்திருந்த பொடி மெனிக்கே

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை பயணித்த பொடி மெனிக்கே ரயிலானது  இன்று காலை ஹட்டன்- மல்லியப்பு பிரதேசத்தில் சுமார் 30 நிமிடங்கள் தரித்து நின்றுள்ளது.

குறித்த ரயில் ஹட்டன் ரயில் நிலையத்துக்குள் உள் நுழைவதற்கான சமிக்ஞை கிடைக்காமையாயினாலேயே இவ்வாறு 30 நிமிடங்கள் தரித்து நின்றுள்ளது.

குறித்த ரயிலிருந்து பல தடவைகள் ஒலி எழுப்பப்பட்டதன் பின்னர், ஹட்டன் ரயில் நிலைய ஊழியர் ஒருவர் பச்சை நிறக் கொடியுடன் ரயில் தரித்து நின்ற இடத்துக்கு வருகைத் தந்து கொடியை ​அசைத்த பின்பே ரயில் ஹட்டன் ரயில் நிலையத்தை நோக்கி புறப்பட்டுள்ளது.

முற்பகல் 11.30 மணிக்கு ஹட்டன் ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டிய ரயில் குறித்த சமிக்ஞை பிரச்சினையால் 12 மணிக்கே ஹட்டன் ரயில் நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இதேவேளை, சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட ​கோளாறே இந்த சமிக்ஞை பிரச்சினைக்கான காரணமென, ஹட்டன் ரயில் நிலையதிபர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .