2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

சமுர்த்தி அங்கத்துவ நடவடிக்கையில் தோட்ட மக்கள் புறக்கணிப்பு

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 29 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன்

வட்டவளை பிரதேசத்தை மையப்படுத்தி இடம்பெற்ற சமுர்த்தி பயனாளிகள் தொடர்பான  கூட்டத்தில், மவுண்ட்ஜின் தோட்ட  மக்கள் அங்கத்துவம் பெருவதில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் இராமசாமி இராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், குறித்த தோட்டத்தில் சமுர்த்தி பயனாகளின் உறுப்பினர்களை தெரிந்தெடுக்கும் கூட்டமானது, நோட்டன் சமுர்த்தி காரியாலாயத்தினூடாக அதிவிஷேட பாதுகாப்பு துறையினர் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியிலே நேற்று முன்தினம் (27) நடைபெற்றது.

இதில் பெருபான்மையினருக்கே முதலிடம் வழங்கப்பட்டதுடன், பெரும்பான்மை இன மக்களே, குறித்த குழுவில்  உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர்.

இந்த குழுவில், மவுண்டஜின் தோட்டம், 101 கொலனி ஆகியவற்றை சேர்ந்த மக்கள் எவரும் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பதுடன்,  திட்டமிட்டே இவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என தன்னிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

எனவே குறித்த தோட்டத்தில் இடம்பெற்றுள்ள புறக்கணிப்பு விடயத்தை கவனத்திற் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்கள் உரிய நடவக்கை எடுக்கப்படல் வேண்டும் என அவர் கோரிக்கை முன்வைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X