Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 09 , பி.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
பசறை, கோணக்கலை மேற்பிரிவு தோட்டத்தில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் வள்ளி, தெய்வானை சமேதராய் எழுந்தருளியிருக்கும் முருகன் சிலைக்கு சூட்டப்பட்டிருந்த தங்கநகைகள் இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளன.
ஆலய பூசகரின் மகன் செவ்வாய்க்கிழமை (08) மாலை பூசை ஏற்பாடு செய்வதற்காக சென்றவேளையில் ஆலய கதவுகள் திறக்கப்பட்டிருப்பதை கண்டு தனது தந்தையான
பூசகருக்கு அறிவித்துள்ளார்.
பூசகர் ஆலயத்துக்குச் சென்று பார்த்தபோது, சுவாமிகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், ஆலய நிர்வாக சபையினரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதுதொடர்பில் பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 May 2025
17 May 2025