2025 மே 17, சனிக்கிழமை

சமையல் எரிவாயு விநியோகத்தில் பாரபட்சம்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

நான்கு நாட்களின் பின்னர்  ஹட்டன் நகரில் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்ட நிலையில், விற்பனை பிரதிநிதிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது.

ஹட்டன் நகருக்கு லிட்ரோ சமையல் எரிவாயு 13ஆம் திகதி இரவு கொண்டு வரப்பட்டதுடன், அன்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான சிலிண்டர்களே விநியோகிக்கப்பட்டதால், இருதரப்புக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.

சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவு எரிவாயு சிலிண்டர்களே கிடைத்துள்ளதுடன், அவற்றில் ஒரு தொகை ஹோட்டல்களுக்கு ஒதுக்கப்பட்டதால், எரிவாயு கொள்வனவுக்காக வரிசைகளில் காத்திருந்த பலர் வெறுங்கையுடன் திரும்பும் நிலை ஏற்பட்டதால் இதன்போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

விற்பனை முகவர்கள் ஹோட்டல்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்ட​ர்களை விநியோகிக்கும் போது, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேலதிக தொகையைப் பெறுவதால், சாதாரண நுகர்வோருக்கு சிலிண்டரை விநியோகிக்க பின்வாங்குவதாகவும் நுகர்வோர் குற்றஞ்சுமத்துகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .