2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

“சம்பளத்தை கூட்டினால்: சம்பளத்தை கூட்டு”

Editorial   / 2023 நவம்பர் 05 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில்  அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் கூறியுள்ளார்.

 ஹட்டன் கொட்டகலை நகரிலுள்ள தனியார் நிகழ்வு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பழனி திகாம்பரம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று மக்கள் வாழமுடியாத நிலையில் உள்ளனர், அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன, வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன ஆனால் சம்பளம் மட்டும் அதிகரிக்கப்படவே இல்லை என்றார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் கூறுகிறது, அப்படியாயின் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டும் என்றார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அரசாங்கம் அதிகரித்தாலும் தோட்டக் கம்பனிகள் அதிகாரிக்காது, தோட்டக் கம்பனிகளின் அதிகாரிகளை வரவழைத்து சம்பளத்தை அதிகரிக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தவேண்டும் என்றார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள், நாட்டுக்காக உழைக்கும் மக்கள், அந்நியச் செலாவணி கொண்டு வருபவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டுக்கு வந்து 200 வருடங்கள் ஆகிறது, ஆனால் அவர்களுக்கு நாளொன்றுக்கு  500-950 ரூபாய்தான் கிடைக்கிறது.

 தேயிலைத் தோட்டங்களை அரசாங்கம்   கம்பனிகளுக்கு வழங்கியது போன்று தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கினால் தேயிலைத் தோட்டங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு தேயிலை உற்பத்தி செய்யப்படும். தோட்டத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 20 கிலோ கிராம் கொழுந்துகளை பறித்தால், நாளொன்றுக்கு  2000 ரூபாய் சம்பாதிக்க முடியும் என்றார்.

சம்பளத்தை அதிகரிக்காவிடின் தேயிலை தோட்டங்கள் காணாமல் போகும் எனவே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அரசாங்கம் உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்றும் கோரினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X