2025 மே 08, வியாழக்கிழமை

சர்வதேச மத நல்லிணக்க 7 ஆவது மாநாடு நிறைவு

Freelancer   / 2023 செப்டெம்பர் 04 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா சீத்தாஎலியா "எஸ்போர்ட்"சுற்றுலா ஹோட்டலில் கடந்த முதலாம் ஆம் திகதி (வௌ்ளிக்கிழமை) ஆரம்பமாகிய "சர்வதேச மத நல்லிணக்க அமைப்பின் 7வது மாநாடு" ஞாயிற்றுக்கிழமை(3)  நுவரெலியா சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜையுடன் நிறைவு பெற்றது.

மத நல்லினக்கம் இன ஒற்றுமை முதன்மைப்படுத்தி 7 வது சர்வதேச மாநாடு நுவரெலியாவில் மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.

இந்த மாநாட்டில் இந்தியா பங்களாதேஷ், மலேசியா, சிங்கப்பூர் நேபாளம், இந்தோனேஷியா இந்தியா உட்பட  பல வெளி நாடுகளை சேர்ந்த 39 பேர் கலந்துக்கொண்டனர்.

மாநாட்டின் இறுதி நிகழ்வாக ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் விசேட பூஜை நடைபெற்றதோடு குறித்த பூஜையில் கலந்துக்கொண்ட வெளி நாட்டவர்களுக்கு ஸ்ரீ சீதையம்மமன் ஆலய நிர்வாக சபை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஸ்ரீ சீதையம்மமன் ஆலய ஞாபக விருதுகள் வழங்கி வைத்தார்.

எஸ்.கே. குமார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X