2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சர்வமத செயற்குழு உறுப்பினர்களின் வேண்டுகோள்

R.Maheshwary   / 2022 மே 15 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன்

தற்போது நாட்டில் ஏற்பட்டிக்கும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு சாந்தி ,சமாதானம் ,நல்லிணக்கம் மற்றும் மத , கட்சி ,  இனம்   போன்ற வேறுபாடுகளுக்கு உள்ளாகாமால் தாங்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் சமத்துவத்துத்துடனும் வாழ வேண்டும் நுவரெலியா மாவட்ட சர்வமத செயற்குழு உறுப்பினர்கள் வேண்டுகோள்விடுத்தனர்.

நேற்று(14)  கொட்டகலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

தற்போது மக்கள் மிகவும் ஒரு அசாதாரணமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக பாடசாலை முதல் அனைத்து நிறுவனங்களிலும் பிரச்சினையாகதான் இருக்கின்றது. இவ்அசாதாரண சூழலில் இருந்து விடுபட வேண்டும். குறிப்பாக எமது நாட்டில் நிலவும் அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மிகவும் பாரதூரமாக தலைவிரித்து ஆடுகின்றது. மக்கள்  அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மத தலைவர்கள் தற்போது ஒற்றுமையாக இருக்கின்றோம்.அதை போல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாதம்,மதவாதம் போன்ற தூண்டுதல்களுக்கு  உள்ளாக கூடாது. அனைவரும் அமைதியாகவிருந்து எமது நாட்டுக்காக  சிந்தித்து இலங்கையர் என்ற ரீதியில் இருந்தால் அதுவே மிகவும் பயனுடையதாகவிருக்கும் .ஆதலால் காலை மாலை இதற்காக பிரார்த்தனை செய்யப்படல் வேண்டும்.

இலங்கை தேசத்தை மற்றை நாடுகளைவிட முன்மாதிரியாக கொண்டு வருவதற்கு நாம் அனைவரும் மதித்து நடத்தல் வேண்டும்.எல்லா மதங்களையும் உயர்வாக எண்ணுவோம்,உங்கள் உரிமைகளை கேட்கும் போது எவ்விதமான பொருட்களுக்கும் மனித உயிர்களுக்கும் எவ்வித சேதம் விளைவிக்காமல் நாட்டு மக்கள் அனைவரும் சாந்தி சமாதானத்துடன் உரிமைகளை கேட்க வேண்டும்.

அத்துடன் நாம் சண்டை  செய்துதான் பொருளாதாரத்தையோ ஏனையவற்றையோ கட்டியெழுப்ப முடியாது. நாட்டில் சமாதனம் ஏற்பட வேண்டுமென்றால் இன ,மத பேதங்களின்றி எல்லோரும் ஒன்று சேர வேண்டும்.

எமது அடிமனதில் சமாதனாத்திற்கு எதிரான எண்ணங்கள் இருந்தால் அவற்றை தூக்கி எரியப்படல் வேண்டும்.நாம் அனைவரும் நமது நாடு நமது மக்கள் எதிர்வரும் சமுதாயம் என்ற நிலைய அடைய வேண்டுமென்றால் நாம் சமாதனத்துடன் அனைவரும் ஒன்றினைய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதில் சர்வமத தலைவர்களான அகில இலங்கை ஜிம்மத்துல்லா ஹட்டன் கிளையின் உபதலைவர் எம்.எஸ்.வூசைன், நுவரெலியா மாவட்ட சர்வமத குழு தலைவர் பிரமஸ்ரீ நந்தகுமார் குருக்கள், உள்ளிட்ட பலர்  கலந்துக்கொண்டு தமது கருத்துகளை தெரிவித்தனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .