R.Maheshwary / 2022 ஏப்ரல் 06 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். பிரபா
எமக்கு பொறுப்பு கூறும் தலைமைத்துவ அரசாங்கமே வேண்டும். சர்வாதிகாரமோ குடும்ப ஆட்சியோ எமக்கு வேண்டாம் என ஹட்டன் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
நேற்று (5) ஹட்டன்- மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலையை அரசுக்கு உணர்த்தவும் அதற்கு எதிராகவுமே தாம் வீதியில் இறங்கியுள்ளதாக சட்டத்தரணிகள் இங்கு கருத்து தெரிவித்தனர்.
சமூக வலைத்தளங்களை முடக்கம், பொது மக்கள் மீதான வன்முறை என்பவற்றுக்கு எதிராக தாம் நிற்பதுடன், இந்த வன்முறைகள் மூலம் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு நீதி உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு தாம் எப்பொழுதும் முன் நிற்பதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
--
2 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
18 Jan 2026