Editorial / 2026 மார்ச் 02 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த ஆறு இளைஞர்கள் பல்வேறு போதைப்பொருட்களுடன் ஞாயிற்றுக்கிழமை (01) அன்று நல்லத்தண்ணி நகரில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 33 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும்; மொறட்டுவை, மாத்தறை, பாயாகலை, வங்கதெனிய, ஹக்மனை மற்றும் மீகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கஞ்சா, ஐஸ் (Ice), போதை மாத்திரைகள் மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சந்தேகநபர்களை) ஹட்டன் பதில் நீதவான் முன்னிலையில் திங்கட்கிழமை (02) அன்று முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்ரீகர்களில் சந்தேகத்திற்கு இடமானவர்களை நல்லத்தண்ணி பொலிஸார் தொடர்ந்து தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
14 minute ago
19 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
1 hours ago
2 hours ago