2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சவப்பெட்டியை ஏற்றிச் சென்றவர் விபத்தில் பலி

R.Maheshwary   / 2022 நவம்பர் 17 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ, டி சந்ரு 

நானுஓயா - கெல்சி தோட்டத்தில் நேற்று (16) இரவு ஜீப்பொன்று  வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெல்சி தோட்டத்தைச் சேர்ந்த 21 வயதான ஒரு  பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த தோட்டத்தில் உள்ள மரண வீடொன்றுக்கு சவப்பெட்டியை ஏற்றிச் சென்று ஒப்படைத்த  பின்னர், சாரதி தனது வீட்டுக்கு திரும்பிய ​போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், இன்று அதிகாலையிலேயே அவ்வழியாக சென்ற தொழிலாளர்கள் விபத்தை கண்டு நானுஓயா பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த போது, சாரதி ஜீப்பிலேயே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

விபத்தின் ஜீப்பின் சாரதி அதிக மதுபோதையில் இருந்துள்ளதுடன், தனது மனைவியுடன் வாய்த்தர்க்கம் செய்து கொண்டே ஜீப்பை செலுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .