2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சாரதி மீது தாக்குதல்; இருவர் கைது

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 31 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் டிப்போவில் பணியாற்றும் இ.போ.ச பஸ்ஸின் சாரதி ஒருவர், நுவரெலியா பஸ் தரிப்பிடத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளான நிலையில், நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பத்துடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹட்டனிலிருந்து மட்டக்களப்புக்கு சேவையில் ஈடுபடும் பஸ்ஸின் சாரதியே, இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

ஹட்டனுக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான பஸ் சேவையை இடைநிறுத்துவதற்காக விஷமிகள் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக, ஹட்டன் டிப்போவின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X