Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், ஆ.ரமேஷ், எஸ்.சதீஸ்,சுஜிதா
லிந்துலை மட்டுக்கலை 7 ஆம் இலக்க கொலணி பிரிவில் மரக்கறி தோட்டத்தில் புதைக்கப்பட்ட, பிறந்து மூன்று நாட்களேயான பெண் சிசுவொன்றின் சடலம், நேற்று (14) தோண்டியெடுக்கப்பட்டது.
சம்பவத்தையடுத்து, சிசுவின் தாயென சந்தேகிக்கப்படும் பெண்ணையும் மற்றும் அச்சிசுவை புதைப்பதற்கு உதவியதாக கூறப்படும் பெண்ணையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் தயா நாணயக்கார முன்னிலையிலேயே சிசுவின் சடலம், தோண்டி எடுக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, மட்டுக்கலை 7 ஆம் இலக்க கொலணி பகுதியில் 23 வயது மதிக்கதக்க பெண்ணொருவர், கடந்த வௌ்ளிக்கிழமையன்று தனது வீட்டில் வைத்தே சிசுவை பிரசவித்துள்ளார்.
இதனையடுத்து அப்பெண்ணுக்கு அதிக குருதிப் போக்கு ஏற்பட்டதன் காரணமாக அப்பெண் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு இந்தப் பெண்ணிடம் விசாரணையை மேற்கொண்ட வைத்திய அதிகாரிகள், அப்பெண் சிசுவை பெற்றெடுத்ததால் தான் குருதி போக்கு ஏற்பட்டு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
40 minute ago
1 hours ago
1 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago
21 Jul 2025