Editorial / 2019 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம்.ஹேவா
காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆண் சிசுவின் தாயெனச் சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரை, ஹட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
டிக்கோயா வனராஜா தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி பெண், அண்மையில் சிசுவொன்றைப் பிரசவித்துள்ளார் என்று விசாரணைகளின்மூலம் தெரியவருகிறது.
மேற்படி நீர்த்தேக்கத்தில் சிசுவின் சடலமொன்று கிடப்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்து, அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டதுடன், பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலத்தை வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில், ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
41 minute ago
51 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
51 minute ago
56 minute ago