2026 ஜனவரி 21, புதன்கிழமை

சிரேஷ்ட தொழிற்சங்கவாதி மாதவன் காலமானார்

Kogilavani   / 2021 மே 30 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்  

சிரேஷ்ட தொழிற்சங்கவாதியான தனுஸ்கோடி மாதவன் (வயது 70), கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் இன்று(30) காலை மரணமடைந்தார்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டது.

இந்நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவுக்கான விசேட விடுதிப் பிரிவில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

நுவரெலியா மாநகர தகனசாலையில் கொரோனா சட்டவிதிகளுக்கமைய அவரது உடல், இன்று(30) தகனம் செய்யப்படவுள்ளது.

நுவரெலியா பரிசுத்த திருத்துவக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியை கற்ற அமரர் டி.மாதவன், ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார்.  இவர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாநில பிரதநிதியாக 1976ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் நன்மதிப்புப் பெற்றுசெயற்பட்ட மூத்த தொழிற்சங்கவாதி என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X