2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சிறுத்தை இறைச்சியை விற்ற நால்வர் சிக்கினர்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 14 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

தேயிலைத் தோட்டமொன்றில் நடமாடிய சிறுத்தையைக் கொன்று, அதன் இறைச்சியை விற்பனை செய்த நால்வர் பொகவந்தலாவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுத்தையை பொறியில் சிக்க வைத்து கொன்று, இறைச்சியை விற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பொலிஸாரால் நேற்று (13) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கொட்டியாகல தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார், சிறுத்தையின் சில உடற்பாகங்களையும் சந்தேகநபர்களிடமிருந்து மீட்டு நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X