R.Maheshwary / 2022 மே 24 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
தலவாக்கலை- ட்ருப் தோட்டத்தில் சிறுத்தையின் உடலமொன்று, இன்று (24) காலை மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தேயிலைப் பறிப்பதற்காக சென்ற சிலர், இது தொடர்பில் தோட்ட முகாமையாளருக்கு அறிவித்துள்ளனர்.
பின்னர், தோட்ட முகாமையாளரால் நுவரெலியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ட்ருப் தோட்டத்தில் கடந்த சில நாட்களாக வளர்ப்பு நாய்கள் பல காணாமல் போயிருந்ததுடன், காணாமல் போன நாய்களின் தலைகள் மாத்திரம் தோட்டத்தின் பல இடங்களில் காணப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago