Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்
“இந்த நாட்டில், சிறுபான்மை இனத்தவர்களாகிய தமிழர்களும், முஸ்லிம்களும் ஆட்சி அமைக்க முடியாது. ஆட்சியாளர்களிடம் பேசியே, எதையும் சாதிக்க முடியும். இரு பிரிவினருக்கும் இடையிலான பிரச்சினையை பேசித் தீர்ப்பதற்கு, ஒற்றுமை அவசியம். அந்தவகையில் இரு இனத்தவர்களது தலைவர்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்” என்று, மத்திய மாகாண விவசாயத்துறை மற்றும் அபிவிருத்தி, தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தெரிவித்தார்.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவின் ஆலோசனைக்கமைய, மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் 4.8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நோர்வூட் நிவ் வெளி தமிழ் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத் திறப்பு விழா, இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர்,
“மியான்மார் றோகிஞ்சா அகதிகளுக்கு இலங்கையில் அடைக்கலம் கொடுப்பதில் கடந்த இரண்டு தினங்களாக கொழும்பில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. நாமும் ஒரு காலத்தில், அநாதைகளாக நாடு கடந்து சென்றுள்ளோம். அதேபோன்று, யுத்த காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு பகுதியிலிருந்து பலர் எமது பகுதிகளுக்கும் வருகை தந்தனர். அவர்களுக்கு நாம் அடைக்கலம் கொடுத்தோம். ஆனால், பயங்கரவாத செயலில் ஈடுப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை.
“இன்று சமூக ரீதியாக சிறுபான்மை இனத்தவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளன. உதாரணமாக இந்த நாட்டு மக்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு மாணவிக்கு நேர்ந்த கொடூரமான செயலுக்கான தீர்ப்பு கிடைக்கப் பெற்றது.
அது புங்குடுதீவு மாணவியான வித்தியாவுக்கு ஏற்பட்ட கொடூரமான செயலாகும். இந்த கொடூர செயலில் ஈடுப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுதான் இந்த நாட்டில் உள்ள தற்போதைய சட்டங்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வித்தியாவின் குடும்பத்தாரை சந்தித்து இந்த கொடூர செயலுக்கு நல்ல தீர்வை பெற்றுத் தருவேன் என்றார். அதேபோன்று உரிய தீர்ப்பு கிடைத்து விட்டது. வடக்கில் முக்கிய தலைவர்கள் பலர் இருந்த காலத்தில் ஒரு நல்ல தலைவரும் இருந்தார். அவரை இழந்ததன் பின்னரே, பாடசாலை மாணவிக்கு இந்த கொடூர செயல் இடம்பெற்றுள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago