2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: காவலாளி கைது

Kogilavani   / 2017 நவம்பர் 21 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

மஸ்கெலியா, ஹப்புகஸ்தென்ன தோட்ட மேற்பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட ஏழுவயதான பாடசாலை மாணவியை, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், அந்தத் ​தோட்டத்தின் காவலாளியை பொலிஸார், திங்கட்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர், 29 வயதான திருமணமாகாதவர் என்று ​மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட அந்த மாணவி, ஹப்புகஸ்தென்ன தமிழ் வித்தியாலயத்தில், 3ஆம் தரத்தில் கல்விப்பயிலுகின்றார்.

அந்த மாணவி, பாடசாலையில் நடைபெற்ற மேலதிக வகுப்புக்குச் சென்றுவிட்டு, மீண்டும் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்த வேளையில், மேற்படி நபர்,  திங்கட்கிழமை மாலை 6 மணியளவில்  சிறுமியை தேயிலைச் செடிகளுக்குள் பலவந்தமாக இழுத்துச் சென்று, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஹப்புகஸ்தென்ன தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் செல்லையா ஜோனிவேல், மஸ்கெலியா பொலிஸூக்கு செய்த முறைப்பாட்டை அடுத்து, சந்தேகநபர் அன்றையதினம் இரவே கைதுசெய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமியும் சந்தேகநபரும், வைத்திய பரிசோதனைகளுக்காக  நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் விசேட நீதிமன்ற வைத்தியரிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் டிரோன் ரத்னாயக்க தெரிவித்தார்.

சந்தேகநபர் தொடர்பிலான வைத்திய அறிக்கைக் கிடைக்கப்பெற்றதும், அந்த ​அறிக்கையுடன் மேற்படி நபரை, ஹட்டன் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவித்த அவர், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .