2025 மே 15, வியாழக்கிழமை

சிறுமிகளுடன் தேயிலை மலைக்குள் நுழைந்த இராணுவ சிப்பாய் கைது

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 15 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

சிறுமிகள் இருவரை துஸ்பிரயோகப்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று(14) கைதுசெய்யப்பட்டுள்ளார் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வூட்- வெஞ்சர் தோட்டத்தைச் சேர்ந்த குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறை நிமித்தம் தனது வீட்டுக்கு வருகைத் தந்துள்ளதுடன், குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 10 மற்றும் 8 வயது சிறுமிகள் இருவரை தேயிலை மலைக்கு அழைத்துச் சென்று, துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.

இதன்போது ஒரு சிறுமி அவரிடமிருந்து தப்பியோடி வந்தததை அவதானித்த பிரதேசவாசிகள் சந்தேகநபரை பிடித்து நோர்வூட் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமிகளின் பெற்றோரால் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ​செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமிகள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின் விசேட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கிளி​நொச்சி பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமொன்றில் கடமையாற்றி வருவதாகத் தெரிவித்த பொலிஸார், அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .