Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2017 நவம்பர் 09 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவை போனோகோட் தோட்டத்தில், 10 வயதுச் சிறுமியை கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அச்சிறுமியின் சிறிய தாயையும் அவரின் மைத்துநரையும், எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஹட்டன் மாவட்ட நீதிபதி எஸ்.சரவணபவன், புதன்கிழமை உத்தரவிட்டார்.
மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா தேவி, செந்தில் ஆகிய இருவருமே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் தாய், வெளிநாட்டில் பணிபுரிவதாகவும், சிறுமியின் தந்தை, சிறுமியை அவரது பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு, கொழும்பில் பணிபுரிந்து வந்துள்ளாரெனவும் தெரியவருகிறது.
இந்நிலையில், சிறுமி கடந்த ஒன்பது வருடங்களாக, பாட்டியின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், சிறுமியை அவரது சிறிய தாயிடம் ஒப்படைத்துவிட்டு, சிறுமியின் பாட்டியும் கொழும்புக்கு வேலைக்கு சென்றுவிட்டதால், சிறுமி தனது சிறியதாயின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக சிறுமியின் சிறிய தாய், அச்சிறுமியைக் கடுமையாக கொடுமைப்படுத்தி வந்துள்ளாரென்றும், சிறுமியின் உடலில் உள்காயங்கள் காணப்படுகின்றன எனவும், மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கடந்த சனிக்கிழழை, சிறுமி மீது மேற்கொள்ளப்பட்டத் தாக்குதலைக் கண்டு, பிரதேச மக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸார் சிறுமியை மீட்டதுடன், மேற்படி இருவரையும் கைதுசெய்து, நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்படி இருவரையும் 7ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிட்டார். இவர்களை மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago