2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான்

Freelancer   / 2022 நவம்பர் 11 , பி.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்.

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திரகாந்தி (எஸ்கடேல்) தோட்டத்தில் காணாமற் போன பத்து வயதுடைய சிறுவன் நுவரெலிய பொலிசாரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சிறுவனின் தந்தை தங்கராஜ் தெரிவித்தார் இதை கந்தப்பளை பொலிசாரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சிறுவன் எஸ்கடேல் தோட்டத்தில் தனது ஆச்சியின் பாதுகாப்பில் இருந்து வந்த நிலையில் (10) மாலை காணாமற்போயுள்ளதாக இன்று காலை கந்தப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறுவன் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த நிலையில் கந்தப்பளை,பொரலந்த,ஆவாள் மற்றும் நுவரெலியா ஆகிய நகரங்களில் உள்ள சி.சி.டிவி உதவிகளை கொண்டு இச் சிறுவன் (11) பிற்பகல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .