2025 மே 05, திங்கட்கிழமை

சிறுவன் துஷ்பிரயோகம்: சந்தேக நபருக்கு 07 வருட கடூழிய சிறை

Mayu   / 2024 பெப்ரவரி 28 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா பொலிஸ் பிரிவுட்குட்பட்ட வலப்பனை மத்துரட்ட பகுதியில் 14 வயது சிறுவன் ஒருவரை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு நுவரெலியா மேல் நீதி மன்றம் செவ்வாய்க்கிழமை (27)  07 வருட கடூழிய சிறை தண்டனை  வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

HCR/05/2017 இலக்கம் கொண்ட  இந்த வழக்கு  2017 ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களாக நுவரெலியா மேல் நிதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட வலப்பனை- மத்துரட்ட பிரதேசத்தை சேர்ந்த மந்திலக்க திஸாநாயக்க 14 வயது சிறுவன் ஒருவரை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பை நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய செவ்வாய்க்கி​ழமை (27) மாலை வழங்கினார். இதன்போது குற்றவாளியாக இனங்கானப்பட்ட நபருக்கு எதிரான மூன்று வழக்குகளும் ஏழு வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 04 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும்  இந்த தொகையை வழங்காத பட்சத்தில் மேலும் மூன்று வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினார்.

அதேநேரத்தில் தீதிமன்ற தண்டனை பணமாக 15 ஆயிரம் வழங்க வேண்டுமென அறிவித்த நீதிபதி இத் தொகையை செலுத்தாத பட்சத்தில் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X