2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

சிவசுப்ரமணியர் கோவிலின் முருகன் சிலை மாயம்

R.Maheshwary   / 2021 நவம்பர் 09 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன், தனராஜ்

கோணக்கலை- காவத்தை தோட்டத்தில் உள்ள, 50 வருடங்கள் பழமைவாய்ந்த சிவ சுப்ரமணியர் கோவிலின் காணப்பட்ட,  உலோகத்திலான முருகப்பெருமான் சிலை இனந்தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது.

நேற்று மாலை வேளையில், கோயில் கதவு திறக்கப்பட்டிருந்ததுடன் சிலை காணாமல் இருப்பதை அறிந்த தோட்ட மக்கள் பசறை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

 சம்பவம் தொடர்பில் பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X