2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

சிவனடிக்கு சென்றவர் தீக் குளித்தார்

R.Maheshwary   / 2022 ஜனவரி 03 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

காமினி பண்டார

சிவனொளிபாதமலை யாத்திரைக்குச் சென்ற நபர் ஒருவர், இன்று (3) அதிகாலை, பஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில், தனக்குத் தானே தீயை வைத்துக்கொண்டதாகவும், இதனையடுத்து அவர் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நல்லதண்ணி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர், கடவத்தையைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் மேலும் சிலருடன், சிவனொளிபாதமலை யாத்திரைக்குச் சென்றிருந்த நிலையில், இன்று அதிகாலை அவர்கள் சென்ற பஸ்ஸுக்கு அருகில் சென்ற அவர், அங்கு பஸ்ஸில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, உடனடியாக இவர் 1990 அம்பியூலன்ஸ் மூலம் மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், குடும்ப தகராறே இந்த சம்பவத்துக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என்றனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X