Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 நவம்பர் 09 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சி.டி.பெருமாள்
2022 டிசெம்பர் மாதம் 7 ம் திகதி பௌர்ணமி தினத்துடன் சிவனடி பாதமலை பருவகால ஆரம்பமாக உள்ளது.
2022/2023 க்கான சிவனொளி பாதமலை பருவகால யாத்திரை ஆரம்பமாவதையொட்டி நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட தலைமையில் நல்லத்தண்ணி நகரில் உள்ள பௌத்த மண்டபத்தில் நேற்று (08) கலந்துரையாடல்.
இக்கூட்டத்தில் சிவனொளி பாதமலைக்கு பொறுப்பான பீடாதிபதி பெங்கமு தம்மதின்ன தேரர் கலந்து கொண்டு யாத்திரிகர்கள் நலன் பற்றி விபரமாக கூறினார்.
இந்தக் கலந்துரையாடலில் ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரி, தனியார் பேருந்து நிலைய அதிகாரி, ஹட்டன் புகையிரத நிலைய அதிகாரி, மின்சார சபை அதிகாரி, தேசிய நீர்வளத்துறை அதிகாரி,வனத்துறை அதிகாரி, விலை கட்டுபாட்டு அதிகாரி, வைத்திய அதிகாரி, பொது சுகாதார அதிகாரி, மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவர் ஆகியோர் பங்கேற்றனர்.
ஹட்டன்,கினிகத்ஹேன , நோர்வூட், பொகவந்தலாவ,நோட்டன், மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய அதிகாரிகள் மவுசாகல பகுதியில் உள்ள இராணுவ அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடலில் மவுஸ்சாகலை சந்திமுதல் சிவனொளி பாதமலை உச்சி வரையிலும் வியாபாரத்தில் ஈடுபடும், வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.
விலையை நிர்ணயிக்கவும்
நிகழ்வில் யாத்திரிகர்கள் நலன் கருதி முறையான பேருந்து சேவை, தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ் நிலையில் சகல பொருட்களும் விலை கட்டுப்பாட்டுக்கு அமைய விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
தடுக்கவேண்டும்
மேலும் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருவர் எனவும் நீர்த்தேக்க பகுதியில் அதிகளவில் நீர் வரத்து உள்ளது இதனால் அப்பகுதியில் நீராட செல்வதை தடுக்க இராணுவத்தினர், அதிரடி படையினர் மூலம் தடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கின்றனர்.
தடைசெய்ய வேண்டும்
பிளாஸ்டிக் மற்றும் வெற்றுப் போத்தல்கள் பொலித்தீன் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என வன பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
போதைக்கு தடை
போதைப்பொருள் பாவனை தடுக்க இராணுவத்தினர், அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து செயல்பட உள்ளனர்.
வீதித் தடை
தியகல ,நோட்டன்,மவுஸ்சாகலை, ஹட்டன் மல்லிப்பூ சந்தி ஆகிய நான்கு இடங்களில் வீதி தடை செய்யப்பட்டு வாகனங்கள் பரிசோதனை மேற்கொள்ளபட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதது.
இலவசம்
தங்கு தடை இன்றி மின்சாரம் வழங்க மின்சார சபை உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசி நீர் வடிகால் திணைக்களம் சுத்தமான குடிநீர் வழங்கும் பணியை மலை உச்சியில் இருந்து அடிவாரம் வரை இலவச குடி நீர் குழாய் பொருத்தப்படவுள்ளது.சுத்தமான உணவு பொருட்கள் மற்றும் உணவகங்கள் மூலம் வழங்க பொது சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை.
வீதி விளக்கம்
வீதி அபிவிருத்தி அதிகார சபை முன் வந்து ஹட்டன் முதல் நல்லத்தண்ணி வரை,தியகல நோட்டன் வீதி அபிவிருத்தி செய்தல் மற்றும் ஒரு வழி பாதையாக அமைத்தல் ஹட்டன் நல்லத்தண்ணி மஸ்கெலியா வழி பிரதான பாதையாக அமைத்தல் என உறுதி செய்யப்பட்டது.
வாகனங்கள் நிறுத்த தடை
நல்லத்தண்ணி வீதியில், வாகனங்கள் இருபுறங்களும் நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கழிவறைகள்
கழிவறைகளை இம்முறை குத்தகைக்கு எடுப்பவர் யாத்தியாத்திரிகளின் நலன் கருதி முறையான அனுமதி சீட்டு வழங்க வேண்டும்.அதிகளவில் பணம் அறவிட கூடாது.
மரங்களை தரிக்கக்கூடாது
வன பகுதியில் மரங்கள் தரிக்க கூடாது என வன பாதுகாப்பு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். குறிப்பாக தற்காலிக வர்த்தக நிலையங்கள் அமைக்க இவ்வாறு சட்ட விரோதமாக மரங்கள் தரிக்க வாய்ப்பு உண்டு என அவர்கள் கூறினர்.
அத்துடன் யாத்திரை காலம் நிறைவடையும் வரையிலும் உடையில் பாதுகாப்பு வழங்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
4 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
3 hours ago
7 hours ago