2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சிவனொளிபாத மலை ஏறும்போது குழந்தை பிரசவித்த பெண்

Freelancer   / 2023 பெப்ரவரி 12 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

இரத்தினபுரி பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு நேற்று தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.

32 வயதுடைய பெண் நல்லதண்ணி நகரில் இருந்து சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய மலை ஏரிக் கொண்டிருந்த வேளையில், ஊசி மலைப் பகுதியில் வைத்து அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு, அவ்விடத்திலேயே பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

பின் அவரது குடும்பத்தினர் நல்லதண்ணி பொலிஸாரின் உதவியுடன் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X